வாழ்வின் நிதர்சனத்தை என் வரிகளின் வசீகரத்தால் மாற்ற முயன்று தோற்றுக்கொண்டே இருக்கிறேன் ஒவ்வொரு நாளும்!! |
உறங்குவதற்கு முன் நான் காணும் அழகு முகமும் நீ தான்!! காலை எழுந்தவுடன் என் கைகளால் கட்டி அணைத்து உன் முகம் காணா விடில் அந்நாள் நன்னாள் ஆகுமோ!! |
காதல் என்ற புத்தகத்தில் நம் பெயர் எழுதிப் போகின்றேன்! வாழ்க்கைப் பதிப்பகத்தில் அச்சிட்டு அலங்கரிக்க!! |
நிலா உலா வரும் நேரத்தில் என் மன்னவனுடன் உலா சென்றேன்! அந்நிலவை விட என்னவன் அழகென்று காட்ட!! |
எல்லா காதல் கதைகளும் நம்மைப் போல் அழகானவை அல்ல!! |
உன் நினைவுகள் உள்ள வரை நான் உயிர் வாழ்ந்து கொண்டே இருப்பேன் என் கல்லறையிலும்!! |
நட்சத்திரங்கள் பூவாய் மலர மேகங்கள் கம்பளம் விரிக்க நிலவின் பொன் ஒளியில் பாற்கடல் நடுவே வைத்து நின் கரம் பிடித்திருக்கும் கனவின்று கண்டேனடா!! |
மென்மையான முத்தத்தில் எனதுயிர் தீண்டும் நின் காந்தப் பார்வையில் மெல்லிடை பற்றும் நின் இரும்புக் கரத்தில் தொலைந்து விட்டேன் நான் நின்னிடம் என்னயே தந்து விட்டேன்!! |
நீங்காத வியப்போடு காத்திருக்கிறேன்.. வாழ்வின் போராட்டங்களுக்கு என்றேனும் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்!! |
தூங்காத இரவும் உடன் கொஞ்சம் இசையும் தீண்டும் தென்றல் காற்றும் ஒளிரும் பொன்னிலவும் நீங்காத நின் நினைவும் நான் சேர்த்து வைத்த பொக்கிஷங்கள்!! |
அன்பென்ற கடலில் உன் கால் நனைத்து மகிழும் அலைகளாய் நான்!! |
பார்வையால் கதைகள் பேச மௌனத்தால் கவிதை வார்க்க உள்ளத்தில் உள்ளம் கலந்து ஈருயிர் ஒருயிராய் மாற்ற என்னவன் வந்துவிட்டான்!! |
ஆகாயம் இடம் மாறி போனாலும் நீலக் கடல் நீர் வற்றிப் போனாலும் சுவாசிக்க காற்றின்றி போனாலும் என்றும் என்னுடனே நீ வேண்டும் அன்பே!! |
தினமும் உன் நினைவில் மதி மயங்கிக் கிடக்கும் மனதைக் கேட்டுப்பார் உன் மீதுள்ள காதலை பட்டியலிட்டுச் சொல்லும்!! |
அனுப்பாத குறுஞ்செய்திகளில் நிரப்பாத செய்திகள் பல அடி மனதின் ஓரத்தில் புதைந்திருக்கும்!! ஆழ் கடல் இரகசியம் போல் என்றும் என்னுள்!! |
எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்கை வேண்டும் என்று தான் நானும் வேண்டுகிறேன்! ஒவ்வொரு முறையும் என் எதிர்பார்ப்புகள் பொய்யாகும் பொழுது!! |
அதிகாலை சூரியனும் அந்திமாலை நிலவும் சிட்டுக் குருவிகளின் கீச் கீச் கீதமும் மையிரவின் இருளில் நட்சத்திர ஜொலிப்பும் சேதி சொல்லிப் போகின்றன! என்னவனின் பிறந்த நாள் இன்று!! |
காற்று இருக்கும் இடத்தில் எல்லாம் உந்தன் வாசம் இருக்கும்! உந்தன் வாசம் பிடித்து மூச்சில் அடைத்து உயிர்த்திருப்பேன் நான்! |
திசையறியா பயணத்தில் மொழி புரியா ஊர்களில் பெயர் தெரியா மனிதர்களின் பரிவும் பாசமும் உணர்த்துகிறது வாழ்வின் பொருளை!! |
இயந்திரமாய் நகரும் நொடிகளில் இனிமையான உன் நினைவுகளே என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன!! |
நாம் பழகிய ஆரம்ப நாட்களில் நீ என் மேல் கொண்ட அக்கரையில் காதலில் நீ எனை பார்க்கும் பார்வையில் நீ என் மேல் கொண்ட என்னை அறியாமலே உன்னை நேசிக்கத் தொடங்கினேன்! |
துவண்டு போகும் நேரத்தில் தோள் சாய்த்து நம்மை அரவணைக்க மனம் தளராமல் நம் நம்பிக்கை மீட்டெடுத்து மீண்டும் நாம் நாமாக உருவெடுக்க உதவிடும் ஒருவர் இருப்பார் எனில், வாழ்வு தனில் வேறொரு இன்பம் தான் வேண்டுமோ!! |
என்னவனின் ஒற்றைப் புருவ தூக்கலிலும் ஓர விழிப் பார்வையிலும் நுனி மூக்குச் சிவப்பினிலும் குறு நகைச் சிரிப்பினிலும் கன்னத்து குழியினிலும் தலை கோதும் அழகினிலும் தொலைந்து போகிறேன் நான்! |
மனதில் முளைத்த சிறகுகள் விரித்து சுதந்திர வானில் பறக்கத்தான் ஆசை! வாழ்வில் வரும் தடைகள் தகர்த்து வெற்றி நடையோடு நடக்கத்தான் ஆசை! |
உன் கூந்தல் வாசனையில் தோற்றுப் பொகிறதடி சந்தனமும் சவ்வாதும்!! |
ஓசையின்றி மலரும் பூக்களைப் போல உன்னை காணும் போதெல்லாம் மலர்கின்றேன் நானும்!! |
நிழல் போல தொடர்கிறாய் உந்தன் நினைவால் வருடுகிறாய்! உடன் இருந்தும் சேர முடியாத நிழல் போல் தான் நாமும்!! |
தினமும் உன் நினைவில் மதி மயங்கிக் கிடக்கும் மனதைக் கேட்டுப்பார் உன் மீதுள்ள காதலை பட்டியலிட்டுச் சொல்லும்!! |
யாரும் அறியாத தருணங்களில் நுனி விரல் தீண்டல்களும் பார்வை பரிமாற்றங்களும் இன்றும் நின்றுறைக்கும் நம் வகுப்பறைச் சுவடுகளில்!! இடம்பெற்ற கண் சிமிட்டல்கலும் |
0 Comments